தந்திர பூசை முறைகள் மிகவும் வலிமை வாய்ந்தவைகள். குருவின் மேற்பார்வையில் தான் அவைகளை செய்ய வேண்டும். குரு உபதேசம் இல்லாமலோ அல்லது தவறாக செய்தாலோ மிக பயங்கர பின் விளைவுகள் வரும். தந்திர பூசை முறைகளில் 100 க்கும் மேற்ப்பட்ட பூசை முறைகள் உள்ளது. அதில் சிறப்பு பெற்றது இந்த தசமகா வித்தை எனப்படும் பத்து தேவிகளின் ”தோடலா தந்திர” பூசைகள்தான். அதில் எவ்வளவு நுணுக்கங்களும், சூட்சமங்களும் உள்ளது என ஒரே ஒரு தேவியின் யந்திரமான “ஸ்ரீ சக்கரம்” பற்றி பார்க்கலாம். இந்த ஸ்ரீ சக்கரம் பூசை மட்டுமே “ஸ்ரீவித்தை” என சொல்லப் படுகிறது.
சிவபெருமான் இவ்வுலகிற்க்கு 64 யந்திரங்களும், அதற்குரிய மந்திரங்களையும் அருளினார். அதில் மிக முக்கியமானது இந்த ஸ்ரீ யந்திரம். இதற்கு மொத்த 64 யந்திரங்களின் வலிமையும் உள்ளதென்பதும் ஒரு கருத்து. முதன் முதலில் இறையாற்றல் வெட்டவெளியாக இருந்து இரண்டாக பிரிந்த போது அதுதான் (பெண் Total Cosmic Female Force it now called "Anti Matter") அவரது மனைவி பராசக்திக்கு இந்த யந்திரத்தையும், மந்திரத்தையும் கொடுதார். அதன் பிறகு தனது உடலின் இடது பகுதியில் இருந்து “சிவன் என்னும் அலையதிர்வையும்” வலது பகுதியில் இருந்து இந்த் பிரபஞ்சத்தை காக்க்கும் சக்தியான “விஷ்ணு என்னும் அலையதிர்வையும்” மத்திய பகுதியில் இருந்து “பிரம்மா என்ற அலையதிர்வையும்” உருவாக்கினார்.
அந்த பிரமாண்டமான ஆற்றலையும், அலையதிர்வுகளையும், வான்காந்த்தையும் இன்றும் நம்மாலால் முழுமையாக உணர முடியவில்லை அந்த பராசக்தி என்ற “Anti Matter - ஆன்டை மேட்டர் - எதிர் பொருள்” சில கிராம் எடை பல இன்றய அணு குண்டுகளின் சக்திக்கு சமம்.
இந்த ஸ்ரீ சக்கரம் பல அலையதிர்வுகள் எனப்படும் தேவதைகளை உள்ளடக்கியது. அதனால்தான் தோடலா தந்திர புத்தகத்தில் முதல் வரியே “உங்களின் தலையை கொடுக்கலாம், உயிரை கூட கொடுக்கலாம் ஆனால் இந்த “சோடஷி எனற திரிபுர சுந்தரியின்” மந்திரத்தை மட்டும் கொடுக்க கூடாது” என சொல்லப்பட்டு இருக்கிறது. இங்கு கொடுத்து இருப்பது மூல மந்திரம் மட்டுமே. சிலர் பல புத்தகங்களில், வலைப்பூக்களில் வெளியிட்டு இருக்கிறார்களே என நினைக்கலாம். ஆனால் “இந்த மந்திரம் தெரிந்தவர்கள் பதிப்பிக்க மாட்டார்கள், அப்படி பதிப்பித்தவர்கள் மந்திரத்தை முழுமையாக தெரிந்து கொள்ளாதவர்கள்” இந்த மூல மந்திரத்தை சொல்வதோ ஜபிப்பதோ பலனளிக்காது, இப்படியும் சில சூட்சமங்கள் இருக்கிறது என தெரிவிக்கவே இந்த பதிவு.
முதலில் இந்த யந்திரம் என்ன? எப்படி நிர்மாணிக்கப்பட்டது? இதன் தத்துவ அமைப்புகள் என்ன என பார்ப்போம். இதில் மொத்தம் 9 ஆவாரணங்கள் அவை தேவிகளையும், அவர்களின் குணங்களையும், முக்கியத்துவத்தையும் குறிக்கும்,
நடுவில் 5 கீழ் நோக்கிய தேவியின் முக்கோணங்கள் (நடுவில் இருக்கும் சிறிய முக்கோணத்தையும் சேர்த்து), 4 மேல் நோக்கிய சிவனின் முக்கோணங்களுடன் இணைந்து மொத்தம் 43 முக்கோணங்கள். இந்த 5 தேவியின் முக்கோணங்களில் இருந்து தான் இந்த பிரபஞ்ச தோற்றம் தோன்றியது. 4 சிவனின் அக்னி பிழம்பு போன்ற முக்கோணத்தினால் அவைகள் அழிக்கப்பட்டு மாற்று ஆற்றலாக மாற்றப்படுகின்றன. இந்த சிவ சகதியின் கூடலில் தான் பொருட்களும், உயிர்களும் தோன்றின. இந்த ஸ்ரீ சக்கரத்தின் நடுவில் இருக்கும் புள்ளிதான் “பிந்து” எனப்படும்.
இந்த பிந்துதான் “காமக்கலை” என கூறப்படுகிறது. அதனுள் மூன்று புள்ளிகள் உள்ளது ஒரு சிவப்பு புள்ளி அதன் பெயர் “க்ருகுலா”இது பெண் தன்மையுடையது. இரண்டாவது வெள்ளை புள்ளி அதன் பெயர் “வராஹி” (இது நாம் கோவிலில் பார்க்கும் வாராஹி அல்ல இது வராஹி) ஆண் தன்மை உடையது. இரண்டும் கலந்த கலவையாக மூன்றாவது புள்ளி அது சிவசக்தியின் கூடல். ஒவ்வொரு மனிதனிடமும் ஸ்ரீ யந்திரத்தின் தன்மையும் ஆற்றலும் இயறகையாகவே உள்ளது. வராஹீ என்ற தந்தையிடம் இருந்து நான்கு த்த்துவங்களும், க்ருகுலா என்ற தாயிடம் இருந்து ஐந்து த்த்துவங்களும் ஒரு கரு உருவாக தேவைப்படும். இவைகள் தான் மனித உடலின் ஒன்பது த்த்துவங்கள்.
வராஹியின் நான்கு நெருப்பு பிழம்புகளும் மும்மடங்காகி (4X3=12) 12 சூரிய கலைகளாகி இன்று நாம் சொல்லும் 12 ராசி வீடுகளாகின (மேஷம், ரிஷபம்...மீனம்). க்ருகுலாவின் 5 முக்கோணங்களும் முமடங்காகி (5X3=15) சந்திர கலைகளாகி, அந்த கலைகளே இன்று திதிகள் (பிரதமை, துவிதியை...பௌர்ணமி அல்லது அமாவாசை) எனப்படுகிறது. இந்த ஒன்பது முக்கோணங்கள் அல்லது தத்துவங்கள் ஒன்பது படிகள் ஒரு கருவின் வளர்ச்சியின் அடிப்படைக் காரணங்கள்.
இந்த 5 பெண் முக்கோணங்களும் 4 ஆண் முக்கோணங்களும் ஆறு இடங்களில் இணையும் இடங்கள்தான் முதல் 6 ஆவாரணங்கள். அடுத்து இந்த 43 மூக்கோணங்களை சுற்றி 8 இதழ்கள் கொண்ட வட்டமும், அதை சுற்றி வெளிவட்டத்தில் 16 இதழ்கள் கொண்ட மற்றோரு வட்டம் இவைகள் இரண்டும் 7ஆவது 8 ஆவது ஆவராணம். அதற்கு வெளியில் காம்பௌண்ட் போல் மூன்று கோடுகளும் சேர்த்து கடைசியான 9 ஆவது ஆவாரணம்.
இந்த ஸ்ரீ சக்கரம் என்ற பரிவாரத்திற்கு 108 தேவிகள். இவைகளுக்கு பிரதானமான தேவிதான் “லலித திரிபுர சுந்தரி” இந்த தேவியின் ஏறக்குறைய மறு உருவம் தான் காஞ்சி காமாட்சி. திரிபுரம் என்பது மூன்று உலகம், சுவர்கம், பூமி, நரகம் அல்லது வானுலகம், பூமி, பாதாளம் அல்லது Macrocosm (include all galaxies ), Earth, Microcosm (include all fundamental particles). இவளே திரிதோஷமான முக்குணங்களுக்கு தேவி வாதம், பித்தம், சிலேத்துமம். இவளே ராஜச, தாமஸ, சாத்த்வீக குணங்களுக்கும் அரசி. அதே போல் இச்சை, ஞானம், கிரியா (செயல்) மேலும் இவளின் 5 முக்கோணங்கள் தான் பஞ்ச பூதங்கள்.
இந்த ஸ்ரீ சக்கரத்தின் நான்கு மூலைகளையும் காவல் காப்பவர்கள். சூரியன், விஷ்ணு, சிவன், வினாயகர்
இதன் எட்டு திக்பாலகர்கள்
இது இல்லாமல் பிந்துவில் இருந்து முதல் எட்டு ஆவராணஙகளையும் ஒரு ஆவரணத்திற்கு எட்டு பைரவர்களும், அவர்களின் பைரவிகளும் ஆக மொத்தம் 64 பைரவர்கள்+64 பைரவிகள காவல். ஒவ்வொரு ஒரு பைரவருக்கும் ஒரு கோடி யோகினிகள் பணியாட்கள். ஆக மொத்தம் 64 கோடி யோகினிகள். இவர்கள்தான் லலித சஹர்ஸநாமத்தில் சொல்லப்படும் யோகினிகள்.
வெளிப்புற கோட்டுக்கு பாதுகாப்புக்கு 10 ”சித்தி” தேவிகள் இவர்கள் உருகிய பொன் போன்றவர்கள். (May be Plasma ?)
O1. அனிமா சித்தி
O2. லகிமா சித்தி
O3. மகிமா சித்தி
O4. இஷ்விதா சித்தி
O5. வசித்துவ சித்தி
O6. பிரகாம்ய சித்தி
O7. புத்தி சித்தி
O8. இச்சா சித்தி
O9. பிராப்தி சித்தி
10. சர்வகாம சித்தி
நடு கோட்டுக்கு காவலிருப்பவர்கள்
M1- ஸ்ரீ பிராமி மாத்ருகா
M2- ஸ்ரீ மகேஷ்வரி மாத்ருகா
M3- ஸ்ரீ கௌமாரி மாத்ருகா
M4- ஸ்ரீ வைஷ்ணவி மாத்ருகா
M5- ஸ்ரீ வாராகி மாத்ருகா
M6- ஸ்ரீ மஹேந்திரி மாத்ருகா
M7- ஸ்ரீ சாமுண்டா மாத்ருகா
M8- ஸ்ரீ மகாலக்ஷ்மி மாத்ருகா
உட்புற கோடு முத்திரை சக்தியால் காக்கப்படுகிறது இவர்கள் சிகப்பு நிறம்.
01- சர்வ சங்கோஷொபினி தேவி
02- சர்வ வித்ராவினி தேவி
03- சர்வ கர்ஷினி தேவிi
04- சர்வ வஷ்ங்கரி தேவி
05- சர்வோமதினி தேவி
06- சர்வ மஹன்குஷா தேவி
07- சர்வ கேசரி தேவி
08- சர்வ பீஜா தேவி
09- சர்வ யோனி தேவி
10- சர்வ திர்கண்டா தேவி
தொடரும் ...
வாழ்க வளமுடன்
O1. அனிமா சித்தி
O2. லகிமா சித்தி
O3. மகிமா சித்தி
O4. இஷ்விதா சித்தி
O5. வசித்துவ சித்தி
O6. பிரகாம்ய சித்தி
O7. புத்தி சித்தி
O8. இச்சா சித்தி
O9. பிராப்தி சித்தி
10. சர்வகாம சித்தி
நடு கோட்டுக்கு காவலிருப்பவர்கள்
M1- ஸ்ரீ பிராமி மாத்ருகா
M2- ஸ்ரீ மகேஷ்வரி மாத்ருகா
M3- ஸ்ரீ கௌமாரி மாத்ருகா
M4- ஸ்ரீ வைஷ்ணவி மாத்ருகா
M5- ஸ்ரீ வாராகி மாத்ருகா
M6- ஸ்ரீ மஹேந்திரி மாத்ருகா
M7- ஸ்ரீ சாமுண்டா மாத்ருகா
M8- ஸ்ரீ மகாலக்ஷ்மி மாத்ருகா
உட்புற கோடு முத்திரை சக்தியால் காக்கப்படுகிறது இவர்கள் சிகப்பு நிறம்.
01- சர்வ சங்கோஷொபினி தேவி
02- சர்வ வித்ராவினி தேவி
03- சர்வ கர்ஷினி தேவிi
04- சர்வ வஷ்ங்கரி தேவி
05- சர்வோமதினி தேவி
06- சர்வ மஹன்குஷா தேவி
07- சர்வ கேசரி தேவி
08- சர்வ பீஜா தேவி
09- சர்வ யோனி தேவி
10- சர்வ திர்கண்டா தேவி
தொடரும் ...
வாழ்க வளமுடன்







