கார்த்திகை மாதம் என்றால் ஆச்வின மாத ஐப்பசி சுக்லபக்ஷ ஏகாதசி ஆரம்பித்து கார்த்திகை மாத சுக்ல ஏகாதசி முடிய என பத்ம பராணம் கூறுகிறது. அதாவது கார்த்திகை மாத சுக்ல பக்ஷ ஏகாதசிக்கு உத்தான கைசிசி ஏகாதசி என்று பெயர். இந்த மாதத்தில் விடியற்காலை எழுந்து ஸ்நானம் செய்தால் புண்ணியமாகும். இது நவம்பர் மாதம் 17 ஆம் தேதி ஆரம்பம் ஆகிறது.
இந் நன்னாளில் கார்த்திகை நட்சத்திரமும், முழு நிலவும் ஒன்று சேர இருக்க சிவபெருமான் தேஜோருபமாக, அக்கினிப் பிழம்பாகச் சுவாலைகள் எழும்ப காட்சி அளித்தார் என்பது வரலாறு.
அதாவது சுத்தவெளியில் பரமாணுவின் இயக்கம் ஆதிகாலத்தில் ஜோதியாக தெரிந்தது என பொருள் கொள்ளலாம்.
இவ்வாறு சிவபெருமான் அடிமுடி காணாத ஜோதி சொருபமாக தோன்றிய இடம் “திருவண்ணாமலை” யாகும். முன்னொரு காலத்தில் மூன்று அரக்கர்கள் உலகை இம்சை செய்து வந்தனர். அவர்களை ஈஸ்வரன் தன் புன்சிரிப்பாலேயே சம்ஹாரம் செய்த திருநாள்தான் திருகார்த்திகை பௌர்ணமியாகும்.



பின்னூட்டங்கள் படிக்க

அண்ணா நான் எதிர்பார்த்தது இது தான்.மிக்க நன்றி.எல்லா தகவல்களும் இங்கே கிடைத்துவிடும், நான் ஒவ்வொன்றாய் படித்துவிட்டு அங்கே விளக்கம் பெறுகிறேன் எங்கே பதில் போடுவது என்று தேடி இங்கு முயற்சி செய்தேன்,மிக்க நன்றி அண்ணா.
அன்பு சகோதரி ரேணுகா
நல்வரவு. தங்களின் ஆதரவுக்கு மிகவும் நன்றி.